×

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் இறக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவில் குடியேற்ற துறையால் வழங்கப்படும் கிரீன் கார்டு என்பது அங்கு நிரந்தரமாக வசிக்கவும், பணி புரிவதற்குமான அங்கீகாரம் அளிப்பதாகும். இந்நிலையில் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் இறந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதாக அந்நாட்டை சேர்ந்த கேடோ நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில், அமெரிக்காவில் தற்போது 18லட்சம் பேர் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

நிலுவையில் உள்ள இவற்றில் சுமார் 63 சதவீதம் பேர் இந்தியர்கள். இதேபோல் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் கிரீன்கார்டு பெறுவதற்கான 83 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. வேலைவாய்ப்பு அடிப்படையில் விண்ணப்பிக்கும் சுமார் 4,24,000 பேர் கிரீன் கார்டு பெறுவதற்காக காத்திருந்து இறக்கக்கூடும். இவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள். தற்போது புதிய வேலைவாய்ப்பு பெற்று கிரீன் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்களில் பாதி இந்தியர்களுடையது. இவர்கள் கிரீன்கார்டு பெறுவதற்கு முன்பே இறந்துவிடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மற்றும் சீனர்களை அமெரிக்கா அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தினாலும் வேலை அடிப்படையிலான கிரீன்கார்டுகளில் ஆண்டுதோறும் 7 சதவீதம் மட்டுமே ஒரு நாட்டை சேர்ந்த தனிநபர்களுக்கு வழங்க முடியும். கிரீன் கார்டு பெறுவதற்கு காத்திருக்கும் கால அளவானது அமெரிக்காவிற்கு சிறிது சிறிதாக நெருக்கடியாக மாறி வருகின்றது. அதிபர் பைடன் நிர்வாகம் மற்றும் இந்திய-அமெரிக்க எம்பிக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கிரீன் கார்டு பெறுவதற்கான இந்திய விண்ணப்பதாரர்களின் நிலை நிலையற்றதாகவே உள்ளது.

The post அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் இறக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : US ,New Delhi ,United States Immigrant Department ,
× RELATED சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து பதவி...